image

மன்னிப்புக் கோரிய திருத்தந்தை

வத்திக்கான், மே 27, 2026: மனித அடிமைத்திருத்தத்திற்கு ஆதரவளித்ததில் கத்தோலிக்க திருச்சபையின் பங்கினை வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் ஒப்புக்கொண்டு, திருத்தந்தை பதினான்காம் லியோ, வத்திக்கான் சார்பில் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.


திங்களன்று வெளியிடப்பட்ட அவரது முதல் திருத்தூதுமடலான 'மகத்தான மனிதநேயம்' மடலில் ("Magnifica Humanitas") இந்த மன்னிப்பு இடம்பெற்றுள்ளது. இது முதன்மையாக செயற்கை நுண்ணறிவின் அறநெறி சார்ந்த ஆபத்துகளைப் பற்றி பேசுகிறது.


இந்த ஆவணம் 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய அரசர்களுக்கு நிலங்களைக் கைப்பற்றவும், கிறித்தவரல்லாதவர்களை அடிமைப்படுத்தவும் அதிகாரம் வழங்கிய திருத்தந்தையின் ஆணைகளை நேரடியாக எதிர்கொள்கிறது. 1452-ன் டம் டைவர்சாஸ் (Dum Diversas) மற்றும் 1455-ன் ரொமானஸ் பாண்டிஃபெக்ஸ் (Romanus Pontifex) போன்ற ஆணைகள், ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளில் காலனித்துவ விரிவாக்கத்தை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு கோட்பாட்டிற்கான இறையியல் கட்டமைப்பை உருவாக்கின.


வத்திக்கான் 2023-ல் இக்கோட்பாட்டை முறையாக நிராகரித்தாலும், அந்தப் பழங்கால ஆணைகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படவில்லை.


இந்த வரலாற்றை "கிறித்தவ நினைவுகளில் ஒரு காயம்" என்று வர்ணித்த திருத்தந்தை பதினான்காம் லியோ, மனித மாண்பு புறக்கணிக்கப்பட்டதால் ஏற்பட்ட துன்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார். திருச்சபை அடிமைத்திருத்தத்தை உரிய நேரத்தில் கண்டிக்கத் தவறியதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அவர், இன்றைய கத்தோலிக்கர்கள் இந்த வரலாற்றிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாது என்று கூறினார்.


வரலாற்று ரீதியான இந்த ஒப்புதலுக்கு அப்பால், அட்லாண்டிக் அடிமை வணிகத்திற்கும் டிஜிட்டல் யுகத்தில் உருவாகும் புதிய வகை அடிமைத்திருத்தத்திற்கும் உள்ள தொடர்பை இச்சுற்றுமடல் விளக்குகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்கான கனிமங்களைச் சுரண்டுதல் போன்றவை மனித மாண்பினை மீண்டும் பலிகொடுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக அவர் எச்சரித்தார்.


கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க, மனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


Courtesy : The Wire

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP