image

பொத்தக்காலன்விளை திவ்விய திருக்கல்யாண மாதா திருத்தல இளைஞர்கள் ஏற்பாடு செய்த குருதிக்கொடை முகாம்

தூத்துக்குடி, ஏப்ரல் 04, 2026: பொத்தக்காலன்விளை திவ்விய திருக்கல்யாண மாதா திருத்தலம் மற்றும் லைப்லைன் குருதி மையம் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 03/04/2026, வெள்ளிக்கிழமை அன்று காலை திவ்விய திருக்கல்யாண மாதா அசன மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் திருத்தல அதிபர் தந்தை சி.தே. ஜஸ்டின் அவர்களும், நவமுதலூர் பங்குத்தந்தை. திலகர் ராஜா அவர்களும், அருள்சகோதரர். இம்மானுவேல் அவர்களும், திருக்கல்யாண மாதா கிளினிக் அருள்சகோதரிகள் பலர் கலந்து கொண்டனர்.


இதில் திருத்தல அதிபர் தந்தை அவர்கள் இரத்ததானம் கொடுப்பதால் நன்மைகள் நமக்கே என்றும் இரத்தம் கொடுப்பதால் இரத்த ஓட்டம் சீராக்கப்படும் என்றும் குடல் புற்று நோய் வருவதை தடுக்கலாம் என்றும் மக்களுக்கு ஊக்கமூட்டினார். மேலும் திருத்தல புனித தொன்போஸ்கோ சபை இளைஞர்கள், இறைமக்கள் என்று மொத்தம் 35 பேர் ஆண்டவரின் பாடுகளை தியானிக்கும் இந்நாளில் உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம் என்ற வாக்கினை மனதில் கொண்டு இரத்ததானம் செய்தனர்.


மேலும் இலவசமாக இரத்த வகை பரிசோதனை, ஹீமோகுளோபின் பரிசோதனை ஆகியன நடைபெற்றது. இறுதியாக புனித வெள்ளி அன்று இரத்ததான முகாமினை ஒருங்கிணைத்த திருத்தல புனித தொன்போஸ்கோ சபை இளைஞர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்ததோடு, அவர்களோடு இணைந்து நடத்திய லைப்லைன் குருதி மையம் மருத்துவர்கள் மேலும் உடன் உழைப்பாளர்கள் அனைவருக்கும் திருத்தல அதிபர் தந்தை அவர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டு இரத்ததான முகாம் இனிதே நிறைவு பெற்றது.


- ஜெனித் செல்வ மெல்பா

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP